கள்ளக்குறிச்சி அருகே சித்தாத்தூர் கிராமம் வடக்கு தெருவில் உள்ள 2 மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பங்கள் அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால் எந்நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.