வளைந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-08-20 13:08 GMT

நாகை மாவட்டம் புத்தகரம் கடைத்தெரு மெயின்சாலையோரத்தில் இரும்பிலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் வாகனம் மோதி வளைந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வளைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்