தியாகதுருகம் அய்யப்பா நகர் குடியிருப்பு பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மின்கம்பியை உயர்த்தி கட்டி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.