நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி பிள்ளையார் கோவில் தெருவில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெருவிளக்குகள் கடந்த சில வாரங்களாக ஒளிராமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதன்காரணமாக இரவு நேரத்தில் தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?