மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு எதிரே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?