தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2023-05-21 12:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்