கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாமந்தூர் வரை செல்லும் சாலையில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்கு அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?