திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் 4 முனை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.