திருக்கோவிலூர் தாலுகா எடையூர் கிராமம் கூவனூர் மெயின்ரோடு அருகே உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்கம்பியை உயர்த்தி கட்டி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.